வங்கக்கடல் பகுதியில் டிச.5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்

0 1233

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 5ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, வரும் 8ம் தேதி வாக்கில், வட தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments