லுதியானா குண்டு வெடிப்பு வழக்கில் பத்து லட்சம் ரூபாய் வெகுமதியுடன் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது..!

லுதியானா குண்டு வெடிப்பு வழக்கில் பத்து லட்சம் ரூபாய் வெகுமதியுடன் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது..!
லுதியானா நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கியத் தீவிரவாதியை தேசியப் புலனாய்வு அமைப்பினர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
ஹர்ப்ரீத் சிங் என்ற தீவிரவாதி பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை தமது இந்திய கூட்டாளிகளிடம் கொண்டு வந்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வெடிகுண்டுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி லுதியானா நீதிமன்ற வளாகத்தில் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆறுபேர் காயம் அடைந்தனர்.
ஹர்ப்ரீத் சிங்கைப் பற்றிய தகவலுக்கு பத்துலட்சம் ரூபாய் வெகுமானம் அறிவிக்கப்பட்டிருந்தது. மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்ட ஹர்ப்ரீத் சிங், நேற்று டெல்லி திரும்பிய போது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
Comments