புலிகளுக்கு அருகில் சென்று படம் எடுத்த பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்.. விசாரணை நடத்த வனத்துறையினர் உத்தரவு..!

புலிகளுக்கு அருகில் சென்று படம் எடுத்த பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்.. விசாரணை நடத்த வனத்துறையினர் உத்தரவு..!
மத்தியப் பிரதேசம் சத்புரா புலிகள் காப்பகத்தில் புலிக்கு அருகில் சென்று வீடியோ எடுத்து பதிவிட்ட நடிகை ரவீணா டாண்டன் மீது வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
புலி நடமாடும் பகுதியில் அருகில் சென்று ஷர்மிளி என்ற பெண் புலியையும் அதன் குட்டிகளையும் அவர் படம் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது
வனத்துறையைச் சேர்ந்த வழிகாட்டிகளுடன் தாம் காட்டுக்குப் போனதாகவும் வனத்துறையால் உரிமம் பெற்ற ஜீப்பில் தாம் சென்றதாகவும் ரவீணா டாண்டன் விளக்கம் அளித்துள்ளார்.
Comments