கந்து வட்டி புகார் : பேருராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..!

கன்னியாகுமரி அருகே கந்துவட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக பேருராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விலவூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஞான ஜெபினிடம், அதே பகுதியை சேர்ந்த சீமோன் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது வங்கி காசோலைகளை வழங்கி 3 லட்ச ரூபாய் கடனாகப் பெற்று, 11 லட்ச ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதோடு சீமோன் வீட்டை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தரவேண்டுமென ஞான ஜெபின் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்த சீமோன் மனைவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சீமோன் அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் ஞான ஜெபின் வீட்டில் சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தங்கள், வங்கி காசோலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments