ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கைதான சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கைதான சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லஞ்சம் வாங்கிய போது கைதான சார்பதிவாளர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவனங்கள் சிக்கின.
காட்டூர் பாப்பா குறிச்சியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரது 21சென்ட் விவசாய நிலத்தை பத்திரப் பதிவு செய்ய திருவெறும்பூர் வட்டாட்சியர் ராஸ்கரன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி அசோக் ஒரு லட்சம் ரூபாயினை பாஸ்கரனிடம் வழங்கிய போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் சமயபுரம் மகாளிகுடி கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் வீட்டினை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்த போது 30 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
Comments