இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - இரண்டு பேர் படுகாயம்..!

0 1995
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - இரண்டு பேர் படுகாயம்..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், பரமக்குடி நகர் பகுதியில் உள்ள தேவேந்திர பண்பாட்டுக் கழக மஹால் அருகில் நேற்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது.

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அதிவேகமாக சென்ற கேடிஎம் பைக் நபர் ஹெல்மெட்டில் வீடியோ கேமராவை பொருத்தி வைத்துக் கொண்டு நகர் பகுதியில் உச்சபட்ச வேகத்தில் வந்துள்ளார்.

அப்போது மேற்கிலிருந்து கிழக்காக வந்தவர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வாகனம் வரும் திசையை கவனிக்காமல் உள்ளே புகுந்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments