தோழியுடன் இரவு உணவுக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம்.. இளம்பெண் உள்பட 5 பேரிடம் விசாரணை..!
கொடைக்கானல் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், இளம்பெண் உட்பட ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்லுக்குழி பகுதியில் தென்காசியைச் சேர்ந்த சூர்யா என்பவர் மாத வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தனது தோழியுடன் மலோனி குடிலில் இரவு உணவுக்கு சென்ற சூர்யா, படியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். இரவு உணவுக்கு சென்ற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பான நிலையில், அவரது ஆண் நண்பர்கள் விலக்கிவிட முயன்ற போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து சூர்யா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சூர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் தனது மகனுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
Comments