ரூ.5000 பணத்திற்காக முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர் கைது.!

0 1205

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே ஐந்தாயிரம் ரூபாய் பணத்திற்காக முதியவரை கல்லால் அடித்து கொலை செய்து சேற்றில் புதைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதலையூரைச் சேர்ந்த விவசாயி கணேசன், கடந்த 29-ந்தேதி வெள்ளரசி திடல் வயலில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில், ஆதலையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் செல்வபிரகாஷை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இரவில் மின் மோட்டார் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனிடம், அங்குவந்த செல்வபிரகாஷ் பணத்தை கேட்டு மிரட்டி, அடித்து கொலை செய்து சேற்றில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments