இளைஞரின் தலையை வெட்டி கொலை செய்த வழக்கு.. தலைமறைவாக இருந்த 2 கொலையாளிகள் கைது..!
இளைஞரின் தலையை வெட்டி கொலை செய்த வழக்கு.. தலைமறைவாக இருந்த 2 கொலையாளிகள் கைது..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இளைஞரின் தலையை வெட்டி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது ராமுவின் உடல் மட்டும் கிடப்பதும் தலையை யாரோ வெட்டி எடுத்து விட்டு சென்றிருப்பதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் 2பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. தலையும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments