அப்தாபிடம் இன்று போதைத் தடுப்பு நிபுணர் குழு விசாரணை.. வெளியே அழைத்துச் செல்வது ஆபத்து என்பதால் சிறைக்குள் ஏற்பாடு..!

அப்தாபிடம் இன்று போதைத் தடுப்பு நிபுணர் குழு விசாரணை.. வெளியே அழைத்துச் செல்வது ஆபத்து என்பதால் சிறைக்குள் ஏற்பாடு..!
டெல்லியில் இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாபிடம் தடயவியல் நிபுணர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அப்தாபிடம் போதைத் தடுப்பு சோதனைக்குப் பிறகான விசாரணையை 5 பேர் கொண்ட நிபுணர் குழு இன்று டெல்லி மத்திய சிறைக்குச் சென்று நடத்தவுள்ளது.
அப்தாபை வெளியே அழைத்துச் செல்வது பாதுகாப்பாக இல்லை என்பதால் சிறைக்குள்ளேயே சோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தடயவியல் சோதனைக் கூடம் அருகே அப்தாபை சிலர் தாக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments