காவல் நிலையத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டு கெத்து காட்ட நினைத்த இளைஞர்களை கொத்தாக தூக்கி போலீஸ்..!

மதுரையில், காவல் நிலையத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போட முயன்ற இளைஞர்களிடம் போலீசார் விசாரித்தபோது, போதை மாத்திரைகளை விற்று வருவது தெரியவந்தது.
தல்லாகுளம் காவல் நிலையத்தில் வீறுநடை போட்டபடி வந்த கெவினையும், அவரை வீடியோ எடுத்த குமரனையும், காவல் ஆணையாளர் ஜெகநாதன் பிடித்து விசாரித்தபோது, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுவதற்காக வீடியோ எடுத்தது தெரியவந்தது.
அவர்களது செல்போனில் போதை தரக்கூடிய மாத்திரைகளின் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அது குறித்து விசாரித்தபோது, கல்லூரி காலத்தில், பார்மஸியில் பணியாற்றிவரும் அசார் முகமது, அணாஸ் முகமது ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அவர்களிடமிருந்து போதை தரக்கூடிய மாத்திரைகளை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments