டெல்லி இளம்பெண் கொலை வழக்கு.. ஷ்ரத்தாவை தனி ஆளாக கொலை செய்ததாக அப்தாப் வாக்குமூலம் என தகவல்..!

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொலையாளி அப்தாப், தனி ஆளாக ஷரத்தாவை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அப்தாப்பிடம் இன்று மூளையை பாதி மயக்க நிலைக்கு கொண்டுச் சென்று அதனடிப்படையில் விசாரணை நடத்தும் நார்கோ டெஸ்ட் நடத்தப்பட்டது.
இதில், காவல்துறையினரின் அடுத்தக்கட்ட விசாரணைக்குத் தேவையான பல தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments