டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த ஊழலில் தெலங்கானா முதலமைச்சர் மகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டியது அமலாக்கப்பிரிவு..!

0 1135

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த ஊழலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லியில் புதிய மதுபானக்கொள்கையை அமல்படுத்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், ஏற்கனவே அக்கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதே வழக்கில் கைதாகியுள்ள மதுபான நிறுவன உரிமையாளர் அமித் அரோராவிடம் நடைபெற்ற விசாரணையில், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சமாக அளித்த சவுத் குரூப் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக கவிதா இருப்பதும், இது தொடர்பான செல்போன் உரையாடல்களில் சிக்காமலிருக்க கவிதா 10 செல்போன்களை மாற்றியதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments