புறம்போக்கு நிலங்களின் விவரங்களை கேட்டு ஊத்துக்காடு வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்..!

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களின் விவரங்களை கேட்டு, ஊத்துக்காடு வி.ஏ.ஓவை மிரட்டிய, ஊராட்சிமன்ற பெண் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரான சாவித்திரி, தனது கணவர் மணிகண்டனுடன் சேர்ந்து நேற்று முன்தினம் வி.ஏ.ஓ புருஷோத்தமனிடம், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள புறம்போக்கு நில ஆவணங்களை காண்பிக்குமாறு தகராறு செய்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
இதனிடையே, ஊத்துக்காடு ஊராட்சி நிதி 16 லட்சம் ரூபாயை தன்னிச்சையாக செலவு செய்து, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக, ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரியின் அதிகாரங்களை 6 மாதங்களுக்கு பறித்து,காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Comments