சிறையில் இருக்கும் ரவுடிக்கு ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு வியாபாரிக்கு மிரட்டல்..!

காஞ்சிபுரத்தில் சிறையில் இருக்கும் ரவுடியின் பெயரைக்கூறி, நெல் வியாபாரியிடம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியவரின் ஆடியோ வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச்சேர்ந்த நெல் வியாபாரி தியாகுவை, 17 வழக்குகளில் தொடர்புடைய பிரபா என்பவர் சந்தித்து, பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிக்கு பணம் தேவைப்படுவதாகவும், தரவில்லை எனில், நெல் வியாபாரியின் குழந்தைகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
நெல் வியாபாரி அளித்த புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீஸார் நடத்திய விசாரணையில், ரவுடி பெயரில் போலியாக மற்றொருவர் பேசி, மிரட்டல் விடுத்தது தெரிய வந்ததால், பிரபா மற்றும் அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
Comments