தவறான முறையில் பயன்படுத்தப்பட்ட எஸ்என்எஃப் கார்டுகள் பறிமுதல் - அமைச்சர் நாசர்

0 919

பாலின் தரத்தை குறிக்கும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட SNF கார்டுகள், தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்க வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பால்பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments