குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், கிணற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் சடலங்கள் மீட்பு..!
கடலூர் மாவட்டம் மலையனூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 8 வயது சிறுமியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்கொலையா? கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மனைவியை இழந்த சிவ குருநாதன் என்பவர், சென்னையில் தங்கி வேலை செய்துகொண்டிருந்தபோது, மிஸ்பசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு, 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, சிவகுருநாதன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், மிஸ்பசாந்தி, தனது மகள் மற்றும் தாய் தேபோரால் கல்யாணியுடன் சிவகுருநாதனை பார்க்க மலையனூர் வந்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதன்கிழமை மாலை திடீரென 3 பேரும் காணாமல் போன நிலையில், அங்குள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
3 பேரின் மரணம் குறித்து சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments