உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக களம் இறங்கும் பெண் நடுவர்..!

0 2153

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்க உள்ளனர். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில்  அல்பேட் மைதானத்தில் ஜெர்மனி- கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் பங்கேற்க உள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 38 வயதான ஸ்டெபானி ப்ராபர்ட் இந்த பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு துணையாக, பிரேசிலை சேர்ந்த (newsa back ) நியூசாபேக் மற்றும் மெக்சிகோவை சேர்ந்த (karen dias medina)கரேன் தியாஸ் மெடினா ஆகிய பெண்களும் பணியாற்ற உள்ளனர்.

இதனை, உலகக்கால்பந்து போட்டிகளுக்கான நடுவர்களின் தலைவர் பியர்ளுகி கொலினா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments