குஜராத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உரிமை பெற்றுள்ள மினிஆப்ரிக்கா கிராமத்தினர்..!

குஜராத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உரிமை பெற்றுள்ள மினிஆப்ரிக்கா கிராமத்தினர் நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
குஜராத்தில் 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஜாம்பூர் பகுதியில் ஆப்ரிக்க வம்சாவளியினருக்கு ஓட்டளிக்க தனி பூத் அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திற்கு குடிபெயர்ந்த சில பழங்குடியினருக்கு இந்திய குடியுரிமை அண்மையில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஓட்டுரிமையும் பெற்றனர்.
இதனை விதவிதமான உணவு சமைத்தும், பாரம்பரியமான நடனமாடியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Comments