கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தாய் வீட்டுக்கு வந்த மகளுடன் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

0 681

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தாய் வீட்டுக்கு வந்த மகளுடன் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே சிறுநாடார் குடியிருப்பை சேர்ந்த ரகுபதி, தனது மகள் சந்தியாவை, சென்னை ரெட்ஹில்சை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லாதது குறித்து கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செவ்வாய்கிழமை அன்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால் திருச்செந்தூருக்கு வந்த சந்தியா, தாய் - தந்தையுடன் சேர்ந்து, விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சந்தியா தனது உறவினர்களுக்கு தெரிவித்ததையடுத்து மீட்கப்பட்ட 3 பேரும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தியாவின் தந்தை ரகுபதி, தாய் சத்தியவதி கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments