ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி.. கணவர் உதவியுடன் தலைமறைவான பெண் கைது..!

0 1200

விருதுநகரில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்து விட்டு, கணவர் உதவியுடன் தலைமறைவான பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

காரியாப்பட்டியைச் சேர்ந்த கணேசன், தனது மனைவி உமாதேவி மற்றும் 2 குழந்தைகள் காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி, மதுரையில் இருந்த உமாதேவியை மீட்டனர்.

இதற்கிடையே உமாதேவி காவல்நிலையத்தில் இருக்கும் தகவல் வெளியானதைத்தொடர்ந்து, ஏராளமானோர் அவர் ஏலச்சீட்டு நடத்தியும், நிலம் வாங்கித் தருவதாக தங்க நகைகளை பெற்றும் ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கத்தொடங்கினர்.

இதன் மீது விசாரணை நடத்தியபோது, உமாதேவியை கணேசனே திட்டமிட்டு மதுரையில் தங்க வைத்தது தெரிய வந்ததால், மோசடி வழக்கில் உமாதேவியை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments