வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்ட கார், பைக்கில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் பழவற்காடு அருகே வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் நள்ளிரவில் தீடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
மகிமை ராஜ் என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு 12 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டதாகவும் வெளியே வந்து பார்த்த போது காரும் இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்ததாகவும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு பீர் பாட்டில் போன்ற கண்ணாடி துகள்கள் இருந்ததால், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசி தாக்குதல் நடைபெற்றதா? என்ற கோணத்தில் சிசிடிவு பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments