மானாமதுரை அருகே இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை.. போலீசார் தீவிர விசாரணை!

0 1905

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தலை துண்டித்து எடுத்து செல்லப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மானாமதுரை அடுத்துள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மகன் ராமு நேற்று மாலை திடீர் என மாயமானார். பல இடங்களில் அவர் தேடப்பட்டும் கிடைக்காத நிலையில், இம்மனேந்தல் கண்மாய் அருகே தலை துண்டித்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள், தலையில்லாமல் கிடந்த உடல் ராமுதான் என்பதை அடையாளம் கண்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ராமுவின் தலையை துண்டித்து சென்றவர்களை தேடிவருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments