குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 சட்டப்பேரவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

0 1073

மும்முனை போட்டி நிலவும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 182 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட குஜராத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே போட்டி நிலவி வரும் நிலையில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளில் வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments