அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.51 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் கைது.!
விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் தனது மகனுக்கு வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் நண்பர் மூலமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில பணியாற்றும் குமரய்யா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இவர் ஆவின் நிறுவனத்தில் பொறியாளர் பணி வாங்கித்தருவதாகக் கூறி செல்லதுரையிடம் 31 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதே போல் மேலும் நான்கு பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 51 லட்சம் ரூபாய் மோசடி செய்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவான குமரய்யாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments