காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி.. கிராமத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த கிராமமக்கள்

0 1728

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே காதலையேற்க மறுத்த கல்லூரி மாணவியின் கிராமத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்து கிராமமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை, காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சக்கரை என்பவரது மகன் விஜய் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் விஜய் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து, சந்தம்பட்டி கிராமத்திற்கு நண்பர்கள் 10 பேருடன்  சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். விபரமறிந்த கிராமமக்கள் அந்த இளைஞர்களை பிடித்து கட்டிவைத்து ஊத்தரங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயை சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments