பாலிசி எடுப்பதாகக்கூறி வீட்டில் நுழைந்து கணவன், மனைவியை கட்டிப்போட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை..!

0 1169

எல்.ஐ.சி முகவரிடம் பாலிசி எடுப்பதாகக்கூறி வீட்டில் நுழைந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையிலுள்ள அத்திப்பள்ளியை சேர்ந்த எல்.ஐ.சி முகவரான தேவராஜ கவுடாவிடம் பாலிசி குறித்த தகவல்களைப் பெற சிலர் வந்துள்ளனர்.

அடுத்தடுத்து சந்தேகம் கேட்பது போல மூன்று முறை வீட்டிற்கு வந்த அவர்கள் வீட்டில் யாருமில்லாததை அறிந்து, தேவராஜ கவுடாவையும் அவரது மனைவியையும் கட்டிபோட்டு விட்டு வீட்டிலிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments