தூத்துக்குடியில் பயங்கரம்: ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் படுகொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பாரதிநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவரை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
தகவலறிந்து வந்த சிப்காட் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். இது தொடர்பாக விசாரித்ததில், மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டது ராஜகோபால் நகரை சேர்ந்த பெரியநாயகம் என்பது தெரியவந்தது.
இதனிடையே, இருசக்கர வாகன விற்பனை தொடர்பான தகராறில் சின்ன கண்ணுபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், தப்பியோடிய குறிஞ்சி நகரை சேர்ந்த சரவணனை தேடி வருகின்றனர்.
Comments