மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யக்கூறிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..!

0 1391

ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை பள்ளிகழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலக்கரையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி மாணவர்களை தினமும் கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாகக் கூறப்படுகிறது.

பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்த சிறுவர்களின் கை மற்றும் கால்களில் கொப்பளம் ஏற்பட்ட நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவலகத்தில் புகாரளித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலகத்தில் இது குறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் தலைமை ஆசிரியை கீதாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments