தோழிக்கு ஆசைப்பட்டு அழகிய இளம் பெண்ணை அடித்தே கொன்ற கொடூரன்..! வீடியோ காலில் லைவ் செய்த விபரீதன்

0 3305

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே அறையில் தங்கி குடித்தனம் நடத்தி வந்த இளம் பெண்ணை காதலன், அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலியை தாக்குவதை, தோழிக்கு வீடியோ கால் மூலம் காண்பித்த கொடூர காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் உள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் சந்தோஷ் தமி மற்றும் கிருஷ்ண குமாரி ஆகிய இருவர் பணி புரிந்து வந்துள்ளனர்.

நேபாள நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக லிவ்-இன் டுகெதர் முறையில் ஹொரமாவு என்ற பகுதியில் தனி அறை எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த போதிலும் சந்தோஷ் பல பெண்கள் உடன் தொடர்பிலும், ஆன்லைன் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளான்.

குறிப்பாக கிருஷ்ண குமாரியின் நெருங்கிய தோழி ஒருவரை கடந்த சில வாரங்களாக பின் தொடர்ந்த சந்தோஷ், தொலைபேசி மூலமாக காதல் வலை விரித்துள்ளான்.

சம்பவத்தன்று மாலை பணி முடிந்து தனது அறையில் மது அருந்திய நிலையில் இருந்த சந்தோஷ் , தனது காதலியின் தோழிக்கு விதவிதமாக காதல் குறுந்தகவலை அனுப்பியும், வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்துள்ளான்.

இதனை தோழியுடன் இருந்த கிருஷ்ண குமாரி பார்த்துள்ளார். காதலனின் எல்லை மீறிய காதல் சேட்டையை கண்டு மிகக் கோபத்துடன் பணியில் இருந்து அறைக்கு கிளம்பி சென்றுள்ளார் கிருஷ்ணகுமாரி.

அவர் அறைக்குச் சென்ற சில மணி நேரங்கள் கழித்து சந்தோஷ் செல்போனில் இருந்து கிருஷ்ணகுமாரியின் தோழிக்கு வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த வீடியோ காலை எடுத்தபோது அதில் கிருஷ்ணகுமாரியை சந்தோஷ் கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தும் காட்சிகள் லைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீடியோ கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பதறிப்போன தோழி, தனது நண்பர்களுடன் கிருஷ்ண குமாரியின் நிலையை அறிய அவர் தங்கி இருந்த அறைக்குச் சென்றார்.

அந்த அறையில் கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் வீழ்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, சந்தோஷ் மது அருந்தி கொண்டிருந்தான். கிருஷ்ணகுமாரியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமமூர்த்தி நகர் காவல் துறையினர் கொலைவழக்குப் பதிவு செய்து காதலனை கைது செய்தனர். தன்னுடன் ஒரே அறையில் தங்கி இருந்த காதலி கிருஷ்ணகுமாரி, தன்னை ஏமாற்றியதால் கோபமடைந்து தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

அதே நேரத்தில் கிருஷ்ணகுமாரியுடன் பணிபுரியும் நண்பர்களோ, சந்தோஷின் ஆல்லைன் சாட்டிங் காதல் லீலைகள் அம்பலமானதால் பொறுத்துக் கொள்ள இயலாமல் அவரை அடித்து கொலை செய்து விட்டு சந்தோஷ் நாடகமாடுவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments