ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்கிறது இந்தியா..!

0 1375

ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இன்று இந்தியா ஏற்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் ஓராண்டுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் போது, விதிமுறைகளின்படி அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி ஜி-20 தலைமை பொறுப்பை இன்றுமுதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஜி-20 ஷெர்பா கூட்டம் உதய்பூரில் வரும் 4 முதல் 7ம் தேதிவரை நடைபெறுகிறது.

ஜி20 மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

ஜி20 மாநாட்டையொட்டி அரசின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சுற்றுலா, கலாசாரம் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை ஜி-20 நிகழ்வுகளுடன் இணைக்கப்படும்

நாடு முழுவதும் 75 பல்கலைக்கழகங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பொருளாதார விவகாரங்கள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், சர்வதேச விவகாரங்கள், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படும்.

ஜி-20 நாடுகளைத் தவிர, வங்காளதேசம், மொரீஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட உள்ளனர்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற முழக்கத்துடன் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தவும், 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments