குடிநீர் தொட்டி இயக்குபவரை சுற்றி வளைத்த 10 அடி நீள மலைப்பாம்பு..!

0 1537

திருப்பத்தூர் மாவட்டம் கைலாசகிரி ஊராட்சியின் குடிநீர் தொட்டி இயக்குபவரை 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றி வளைத்து விழுங்க முயற்சித்த போது பொதுமக்களின் உதவியால் அவர் மீட்கப்பட்டார்.

ஆம்பூர் அருகிலுள்ள கைலாசகிரி ஊராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வரும் சங்கர் மலை அடிவாரப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை இயக்குவதற்காக சென்ற போது அங்கிருந்த மலைப்பாம்பு அவரது காலை சுற்றி வளைத்துள்ளது.

இதனால், கீழே விழுந்த சங்கர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்குள், வனத்துறையினரும் அங்கு வந்து சங்கரை மீட்டதோடு, பாம்பு லாவகமாக பிடித்து காப்புக்காட்டுக்குள் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments