சீன அரசை விமர்சித்த 'அலிபாபா' நிறுவனர் ஜாக் மா ஜப்பானில் வசிப்பதாகத் தகவல்..!

0 1390

பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சீன தொழிலதிபர் ஜாக் மா ஜப்பானில் வசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலிபாபா இணையதளம் மூலம் சீனாவின் மிகப்பெரும் பணக்காரராக வலம் வந்த ஜாக் மா, அரசை விமர்சித்ததால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி பல மாதங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என கேள்வி எழுந்துவந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக அவர் டோக்கியோவில் வசித்துவருவதாகவும், அடிக்கடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சென்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது சமயலரையும், பாதுகாவலர்களையும் சீனாவிலிருந்து அழைத்துவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments