முதியோர் உதவித் தொகைக்காக மூதாட்டியிடம் ரூ.5ஆயிரம் லஞ்சம் கேட்கும் விஏஓ.. வெளியான ஆடியோ..!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மூதாட்டியிடம் முதியோர் உதவித் தொகைக்காக பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில் விஏஓ செல்லப்பாண்டி பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த மூதாட்டியிடம் ஒஏபி பணம் பெறுவதற்கு 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பது பதிவாகி உள்ளது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் ஆட்சியர் தலையிட்டு செல்லப்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments