தென்னிந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள்: தமிழக டிஜிபியுடன் என்ஐஏ இயக்குனர் சந்திப்பு!

0 1128

தென்னிந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு-வை என்.ஐ.ஏ இயக்குனர் தினகர் குப்தா சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் பயங்கரவாத அமைப்பின் பின்புலம் இருப்பதாக கருதப்பட்டு, வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது ஷாரீக், தமிழகத்தில் பல இடங்களில் தங்கியிருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் உளவுத்துறை அதிகாரிகளுடன் என்.ஐ.ஏ. இயக்குனர் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments