துபாயில் செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக டாக்ஸியை இயக்கி வரும் பெண்..!

துபாயில் செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக டாக்ஸியை பெண் ஒருவர் இயக்கி வருகிறார்.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை டாக்ஸியில் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பெரிய நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த ஸ்வேதா பாட்டியா அந்த வேலையை விட்டுவிட்டு பெட் டாக்ஸி சேவையை தொடங்கினார்.
செல்லப்பிராணிகளோடு வருவோரை காரில் அழைத்துச் செல்வதோடு, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பிராணிகளை வீட்டிலிருந்து தனியாகவும் அழைத்துச் செல்லும் இவர் இச்சேவையை விரைவுப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments