இஸ்ரேல் நாட்டு இளம்பெண்ணை காரால் மோதிய பாலஸ்தீனரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் போலீசார்..!

இஸ்ரேல் நாட்டு இளம்பெண் மீது காரை மோதி கொலை செய்ய முயன்ற பாலஸ்தீனரை இஸ்ரேல் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
நடைபாதையில் சென்ற 20 வயது இளம்பெண்ணை SUV ரக காரில் பின்தொடர்ந்து வந்த பாலஸ்தீனர் ஒருவர், அப்பெண்ணை வேகமாக மோதிவிட்டு நெடுஞ்சாலை வழியாக காரில் தப்ப முயன்றார்.
தலையில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காரில் தப்ப முயன்ற பாலஸ்தீனரை, இஸ்ரேல் போலீசார் வெகு தூரம் விரட்டிச் சென்று சுட்டுக்கொன்றனர்.
Comments