2022 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக "கேஸ் லைட்டிங்” தேர்வு - மெரியம் வெப்ஸ்டர்..!

2022 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றும் தேடப்பட்ட வார்த்தையாக "கேஸ் லைட்டிங்” என்ற வார்த்தை இருந்ததால், அதுவே இந்த ஆண்டிற்கான வார்த்தை என்று, மெரியம்-வெப்ஸ்டர் (Merriam-Webster) அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பழமையான ஆங்கில அகராதி தயாரிப்பு நிறுவனமான இந்நிறுவனம், கொரோனாவிற்குப் பிறகு, இந்த வார்த்தை பயன்பாடு அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளதோடு, மனச்சிதைவை ஏற்படுத்தும் வகையில், ஒருவரை மிகவும் தவறாக வழிநடத்துவதை, இந்த வார்த்தை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
1938 ஆம் ஆண்டு கேஸ் லைட்டிங் என்ற தலைப்பில் வெளியான நாடகத்தில் மனைவிக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக, அவரை நம்ப வைப்பதற்காக, வீட்டின் விளக்குகளை மங்கலாக எரிய வைத்துவிட்டு, அது பிரகாசமாக எரிவதாக கணவர் கூறுவதை அடிப்படையாகக்கொண்டு இந்த வார்த்தை உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments