பிரிட்டனின் நலன்களுக்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளது - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்..!

0 702

சீனாவுடனான உறவின் பொற்காலம் முடிந்துவிட்டதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரிட்டனின் நலன்களுக்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு, தமது அரசு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது என்றும், இதனை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் புரிந்துகொண்டுள்ளதாகவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments