கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களை நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைக்க பிரிட்டன் அருங்காட்சியகம் முடிவு..!

125 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் படைகளால் நைஜீரியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட புராதன கலைப்பொருட்கள் நைஜீரியாவிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட உள்ளது.
நைஜீரியாவில் 6 நூற்றாண்டுகளாக கோலோச்சிய பெனின் சம்ராஜ்ஜியம், பிரிட்டன் படைகளால் வீழ்த்தப்பட்டபோது, பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டன.
புராதன பொக்கிஷங்களாக கருதப்படும் இந்த கலை பொருட்கள், லண்டனில் உள்ள ஹார்னிமேன் (Horniman) அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அவற்றில் 72 கலைப்பொருட்களை நைஜீரியாவிடம் ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் முன்வந்துள்ளது.
Comments