புற்றுநோய் பாதிப்பால் 4 வயது பெண் குழந்தைக்கு ஒரு கண் அகற்றம்..! தமிழக அரசு உதவிட பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை

கிருஷ்ணகிரி சூளகிரி அருகே, நான்கு வயது பெண் குழந்தைக்கு புற்றுநோய் காரணமாக ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில், வேறு கண் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு, தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
உஸ்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்- துளசி தம்பதியின் மகள் ரோஷிணிக்கு, வலது கண்ணில் பிரச்சனை ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரோஷிணிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, வலது கண் அகற்றப்பட்ட நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை எழும்பூர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேறு கண் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சைக்கு பணத்தை தயார் செய்யமுடியாமல் தவித்து வருவதாக, கூலி வேலை செய்யும் பெற்றோர் கூறியுள்ளனர்.
Comments