பழமையான வீடு இடிந்து விழுந்து 74 வயது மூதாட்டி உயிரிழப்பு..!

0 706

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதியில் 60 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள பழமையான வீடுகளை கணக்கெடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று காலை வீடு இடிந்து விழுந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த 74 வயது மூதாட்டி பாத்திமா பீவி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.

பொக்லைன் இயந்திரம் மூலமாக இடிபாடுகள் அகற்றப்பட்டு, சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார்.

விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments