நடுக்கடலில் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை.. ரோந்துப் படகுகளை கொண்டு மோதுவதுபோன்ற மனதை பதறவைக்கும் காட்சிகள்..!

0 956

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை, இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு மோதுவது போல அச்சுறுத்தி விரட்டியடித்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோட்டைப்பட்டினம், ஜெகதா பட்டினம் துறைமுகத்தில் இருந்து நேற்று மாலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், காங்கேசன் துறைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து விரட்டியதால், மீன் பிடிக்காமல் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments