ஆட்டோவில் பயணம் செய்த செவிலியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக, ஓட்டுநர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் பயணம் செய்த செவிலியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக, ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சந்தைப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் 21 வயது இளம் பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 26 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடித்துவிட்டு, அவர் சந்தைப்பேட்டையில் இருந்து ஆட்டோவில் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டார்.
ஆனால் ஆட்டோ ஓட்டுனர் அங்கு செல்லாமல், அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு ஆட்டோவை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செவிலியர் ஓட்டுநரிடம் கேட்டபோது அவர் செவிலியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
Comments