கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்த பெண் அனாதை சடலமானார்..! கோவில் குளத்தில் மிதந்த சோகம்

0 3132

ஏழு கொலை வழக்குகளில் தொடர்புடைய காதலனின் பேச்சைக் கேட்டு, சாப்பாட்டில் விஷம் வைத்து கணவனைக் கொலை செய்த பெண், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்ட போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர்.

அந்தப்பெண் சூளைமேட்டைய் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி விஜயலெட்சுமி என்பது தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி முண்டக்கன் மோகன் என்பவருடன் விஜயலெட்சுமி தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது ,

கடந்த 2 மதங்களுக்கு முன்பு ரவுடி மோகனுடனான காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் விஜய லெட்சுமி. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட செல்வம் 2 தினங்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மோகன் மற்றும் விஜயலட்சுமியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த விஜயலெட்சுமியை உறவினர்கள் யாரும் வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. பெற்ற குழந்தைகளும் தாயாக ஏற்கவில்லை.

இதனால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட விஜயலெட்சுமி, பார்த்தசாரதி கோவிலில் யாசகம் பெற்று சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று திறந்து கிடந்த சிறியகதவு வழியாக கோவில் குளத்துக்குள் நுழைந்த விஜயலெட்சுமி குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கணவனைக் கொன்று விட்டதால் ஆதரவிற்கு ஆளின்றி அநாதை சடலமாக கிடந்த விஜயலட்சுமியின் உடலை வாங்கி செல்லக் கூட ஆள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments