இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாப்-ஐ ஏற்றி சென்ற போலீஸ் வேன் மீது தாக்குதல்..!

இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாப்-ஐ ஏற்றி சென்ற போலீஸ் வேன் மீது தாக்குதல்..!
டெல்லியில் இளம்பெண் ஷ்ரதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்தாப் உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது.
மும்பையில் கால்சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா, கடந்த மே மாதம் அவரது காதலன் அப்தாபினால் கொல்லப்பட்டார். கொடூரமாக நடைபெற்ற இக்கொலைச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அப்தாபை உண்மை கண்டறியும் சோதனைக்காக டெல்லி போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது, வேனை இந்து சேனா அமைப்பினர் எனக் கூறப்படும் சிலர் வாள்களோடு வழிமறித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments