ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது..!

0 1840
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது..!

தெலங்கானாவில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தொண்டர்களுக்கும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.

நர்சம்பேட்டையில் பேரணி நடத்திய ஷர்மிளா, டி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ பெட்டி சுதர்சன் ரெட்டியை விமர்சித்திருக்கிறார்.

அப்போது, அங்கிருந்த டி.ஆர்.எஸ் கட்சியினர் ஷர்மிளாவின் பிரச்சார வாகனத்தின் மீது தீ வைத்ததையடுத்து, ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. மோதலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த போலீசார், ஷர்மிளாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments