வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை கிண்டியில் வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மசூதி காலனி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கும் செல்போன் காணாமல் போனது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கைக்கலப்பாக மாறி கொடூரமாக தாக்கிக் கொண்டதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி தப்பி ஓடிய உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற நபரை தேடி வருகின்றனர்.
Comments