எலி வாலில் கல்லைக் கட்டி வாய்க்காலில் வீசி கொன்றதாக இளைஞர் மீது எஃப்.ஐ.ஆர்

0 1594

உத்தர பிரதேசத்தில் எலி வாலில் கல்லைக் கட்டி வாய்க்காலில் வீசி கொன்றதாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, காவல் நிலையத்திற்கு உயிரிழந்த எலியுடன் வந்த விலங்கு நல ஆர்வலரான விக்கேந்திர சர்மா, எலியை சித்ரவதை செய்து கொன்றதற்காக மனோஜ் குமார் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து மனோஜ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எலிகள் 'விலங்குகள்' பிரிவின் கீழ் வராததால், விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இந்த வழக்கில் பொருந்தாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments