மகன் உதவியுடன் கணவனை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெண்.. டெல்லியில் மற்றொரு கொடூர கொலை..!

0 1424

டெல்லியில் ஷ்ரதா வாக்கர் என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தைப்போல், பெண் ஒருவர் மகனுடன் சேர்ந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி வீசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...

டெல்லியின் பாண்டவ் நகரில் அஞ்சன் தாஸ் என்பவரை, பூனம் என்ற பெண் மறுமணம் செய்து தனது முதல் கணவருக்கு பிறந்த தீபக்குடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

அதேபோல், அஞ்சனும் பூனமை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படுகிறது.அஞ்சனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அது குறித்து மனைவி எச்சரித்தும் அவர் அதனை தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அஞ்சனை கொல்ல திட்டமிட்ட பூனம், கடந்த ஜூனில் அவருக்கு மதுவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து பின்னர் கழுத்தை அறுத்துக்கொலை செய்தததாக சொல்லப்படுகிறது.

மகன் உதவியுடன் கணவரின் உடலை 10 பாகங்களாக வெட்டி, அதனை பிரிட்ஜில் வைத்து, பின்னர் வெவ்வேறு பகுதியில் வீசியுள்ளனர்.

இந்நிலையில், ஷ்ரதா வழக்கில் உடல் பாகங்களை தேடும் போலீசார், பாண்டவ் நகரில் சில பாகங்களை கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது.

பிரேத பரிசோதனையில் அது ஷ்ரதாவின் உடல் உறுப்புகள் இல்லை என உறுதிப்படுத்தி, பாண்டவ் நகர் பகுதியில் விசாரித்த போலீசார், ஜூனில் பதிவான சிசிடிவி காட்சியில் பூனமும், தீபக்கும் நள்ளிரவில் பையுடன் நடந்து சென்றதை உறுதி செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அஞ்சன் தாஸ் மாயமாகி ஆறு மாதங்களாகியும், அவரது குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ததாகவும், தாய், மகனிடம் நடந்த விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments